அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமையிலான இந்தியக் குழு இத்தாலி பயணம்: இருதரப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை ஒத்துழைப்பை வலுப்படுத்த நடவடிக்கை

இடுகை இடப்பட்ட நாள்: 12 NOV 2026 4:04PM by PIB Chennai

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தலைமையிலான இந்தியக் குழுவின் இத்தாலி பயணம் தொடங்கியுள்ளது. 2026 மே மாதம் பிரதமர் திரு நரேந்திர மோடியின் இத்தாலிப் பயணத்தின் போது மேற்கொள்ளப்பட்ட சிறப்பு உத்திசார் கூட்டாண்மை முடிவுகளை முன்னெடுத்துச் செல்லும் வகையில் இந்தப் பயணம் அமைந்துள்ளது.

2026 நவம்பர் 11 முதல் 15 வரை மேற்கொள்ளப்படும் இப்பயணத்தில், அறிவியல், தொழில்நுட்பம், புத்தாக்கத் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்து உயர்மட்டப் பேச்சுவார்த்தைகள் நடைபெறுகின்றன. இதன் ஒரு பகுதியாக, நவம்பர் 12 அன்று இத்தாலியப் பல்கலைக்கழக, ஆராய்ச்சித் துறை அமைச்சர் அன்னா மரியா பெர்னினியுடன் இரண்டாவது அறிவியல், புத்தாக்கக் கலந்துரையாடலில் டாக்டர் ஜிதேந்திர சிங் பங்கேற்கிறார்.

மேலும் நவம்பர் 13 அன்று டிரைஸ்டே நகரில் உள்ள முன்னணி அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களை இந்தியக் குழு பார்வையிடுகிறது. நவம்பர் 14 அன்று ரோமில் உள்ள இந்தியத் தூதரகத்தில் நடைபெறும் உலக நீரிழிவு தின நிகழ்ச்சியிலும், இந்திய வம்சாவளியினருடனான கலந்துரையாடலிலும் அமைச்சர் பங்கேற்கிறார். அரசு அதிகாரிகள், முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்களின் இயக்குநர்கள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2335423&reg=3&lang=1&_gl=1

****

AD/PD/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2335593) வருகையாளர் எண்ணிக்கை : 4
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी