இடுகை இடப்பட்ட நாள்:
12 NOV 2026 5:07PM by PIB Chennai
பாதுகாப்புத் துறை இணையமைச்சர் திரு சஞ்சய் சேத், வீரதீர விருதுகளுக்கான மேம்படுத்தப்பட்ட இணையதளத்தை (https://gallantryawards.gov.in) புது தில்லியில் இன்று (நவம்பர் 12, 2026) தொடங்கி வைத்தார். வீரதீர விருது பெற்றவர்களின் வீரம் மற்றும் நாட்டுக்காக அவர்கள் செய்த தியாகத்தைப் போற்றுவதற்கும், அவர்களின் வீர வரலாற்றை வருங்காலத் தலைமுறையினருக்காகப் பாதுகாப்பதற்கும் இந்த டிஜிட்டல் தளம் உருவாக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையிலான நவீன வடிவமைப்பு மற்றும் மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. சிறப்பு நிகழ்ச்சிகள், நினைவிடங்கள் மற்றும் அருங்காட்சியகங்கள், வார்பீடியா, விருது பெற்றவர்களின் முழு விவரங்கள், கேலன்ட்ரிபீடியா (கட்டுரைகள்), ஊடகப் பிரிவு மற்றும் மக்கள் அஞ்சலி செலுத்தும் பிரத்யேகப் பிரிவுகள் இதில் இடம்பெற்றுள்ளன.
இந்த இணையதளத்தில் இடம்பெற்றுள்ள 'வீரக் கதை' என்ற பிரத்யேகப் பகுதி, மாணவர்களை வீரதீர விருது பெற்றவர்களின் வரலாற்றுடன் நேரடியாக இணைக்கிறது. இத்திட்டத்தில் பங்கேற்கும் மாணவர்களின் எண்ணிக்கை, முதல் பதிப்பில் 8 லட்சத்திலிருந்து 5-வது பதிப்பில் 1.92 கோடியாக உயர்ந்துள்ளது.
சுதந்திரத்திற்குப் பிந்தைய போர்கள், ராணுவ நடவடிக்கைகள் மற்றும் விருது பெற்றவர்கள் குறித்த டிஜிட்டல் களஞ்சியத்தை உருவாக்குவதுடன், இளைஞர்களிடையே தேசபக்தியை வளர்ப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்நிகழ்ச்சியில் பாதுகாப்புத் துறைச் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் மற்றும் பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2335471®=3&lang=1&_gl=1
****
AD/SE/SH