அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

விண்வெளி சார்ந்த செயற்கை நுண்ணறிவு-மின்னணுத் தகவலறிதல் செயற்கைக்கோள் தொகுப்பை உருவாக்க அஸ்ட்ரோம் நிறுவனத்துக்கு ரூ.64 கோடி நிதியுதவி வழங்க தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம் ஒப்பந்தம்

இடுகை இடப்பட்ட நாள்: 12 NOV 2026 12:56PM by PIB Chennai

மத்திய அறிவியல், தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியம், ஆராய்ச்சி, மேம்பாடு மற்றும் புத்தாக்க நிதியத்தின் கீழ், பெங்களூருவைச் சேர்ந்த அஸ்ட்ரோம் டெக்னாலஜிஸ் நிறுவனத்திற்கு செயற்கை நுண்ணறிவு - மின்னணுத் தகவலறிதல் செயற்கைக்கோள் தொகுப்பை உருவாக்கும் திட்டத்திற்கு ரூ.64.05 கோடி நிதியுதவி வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.

ரூ.128.11 கோடி திட்ட மதிப்பீட்டில், தேசிய பாதுகாப்புப் பயன்பாடுகளுக்காக உள்நாட்டிலேயே விண்வெளி சார்ந்த செயற்கை நுண்ணறிவு மின்னணுத் தகவலறிதல் செயற்கைக்கோள் தொகுப்பை உருவாக்குவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். 50 கிலோ எடை பிரிவிலான சிறிய அளவிலான செயற்கைக்கோள்களை புவியின் தாழ்வு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தி, மின்னணுத் தகவலறிதல் கருவி, செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான தரைவழித் தரவு செயலாக்க மென்பொருள், செயற்கைக்கோள்களுக்கு இடையேயான தகவல் தொடர்பு இணைப்பு ஆகிய தொழில்நுட்பங்களை இத்திட்டம் ஒருங்கிணைக்கிறது.

இந்தியாவின் மேம்பட்ட தொழில்நுட்பச் சூழலமைப்பின் திறனை இத்திட்டம் பிரதிபலிப்பதாகத் தொழில்நுட்ப மேம்பாட்டு வாரியத்தின் செயலாளர் திரு ராஜேஷ் குமார் பதக் தெரிவித்துள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2335322&reg=3&lang=1&_gl=1  

***

AD/PD/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2335518) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali-TR