திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
02 NOV 2026 8:03PM by PIB Chennai
மத்திய திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் அமைச்சகம் 19 நிறுவனங்களை திறன் மேம்பாட்டிற்கான சீர்மிகு மையங்களாக அங்கீகரித்துள்ளது.
புதுதில்லியில் உள்ள திறன் மேம்பாட்டு அமைச்சகத்தில் நடைபெற்ற விழாவில், அமைச்சகத்தின் செயலாளர் திருமதி தேபாஸ்ரீ முகர்ஜி, இதற்கான அங்கீகாரச் சான்றிதழ்களை வழங்கினார். இந்த அங்கீகாரம் 9 அக்டோபர் 2026 முதல் 8 அக்டோபர் 2029 வரை நடைமுறையில் இருக்கும்.
திறன் மேம்பாட்டிற்கான சீர்மிகு மையங்கள், தொழிற்பயிற்சி மையங்களை' அங்கீகரிப்பதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளில் உள்ள 'கிரீன் சேனல்' நடைமுறையின் மூலம், இந்த நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்கள், பிரதமரின் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், மேம்படுத்தப்பட்ட தொழிற்பயிற்சி நிலையங்கள், மத்திய அமைச்சகங்கள், துறைகள் அல்லது மாநில அரசுகளால் நடத்தப்படும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட திறன் மேம்பாட்டு மையங்கள் போன்ற, ஏற்கனவே நற்பெயர் பெற்ற தகுதியுள்ள நிறுவனங்களுக்கு இந்த நடைமுறை விரைவான அங்கீகார வாய்ப்பை வழங்குகிறது.
இந்த முறையில், நிறுவனங்கள் தேவையான தகவல்களைச் சமர்ப்பிக்கின்றன. அவற்றின் விண்ணப்பங்கள் எவ்வித பரிந்துரையோ அல்லது வழக்கமான மதிப்பீட்டுச் செயல்முறையோ இன்றி, நேரடியாக நிர்வாகக் குழுவின் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றன. இந்த நெறிப்படுத்தப்பட்ட ஒப்புதல் செயல்முறையின் மூலம், உயர்தர, புகழ்பெற்ற நிறுவனங்களை விரைவாக அங்கீகரிப்பதே இதன் நோக்கமாகும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2331775®=3&lang=1
***
TV/SV/RJ