பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

புதிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கு நவீன உத்திகளைப் பின்பற்ற வேண்டும் – பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங்

இடுகை இடப்பட்ட நாள்: 12 NOV 2026 2:04PM by PIB Chennai

விரைவான தொழில்நுட்ப முன்னேற்றங்கள், நவீன போர் முறையில் மாறிவரும் சூழலால் ஏற்படும் வழக்கமான, புதிய அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கு முப்படையினரும் திடீர் தாக்குதல் என்ற உத்தியையும், தற்காப்பு அம்சங்களையும் வலுப்படுத்தி தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். 2026 நவம்பர் 12 அன்று புதுதில்லியில் நடைபெற்ற விமானப்படை தளபதிகள் மாநாட்டில் உரையாற்றிய அவர் உளவு, கண்காணிப்பு திறன்களைத் தொடர்ந்து மேம்படுத்தவும், பல்வேறு அமைப்புகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை வலுப்படுத்தவும், அச்சுறுத்தல்களை முன்கூட்டியே கண்டறிய வேண்டியதன் அவசியம் குறித்தும் எடுத்துரைத்தார்.

நமது முப்படையினர் அதுபோன்ற திறன்களையும், வழிமுறைகளையும் உருவாக்க வேண்டும் என்று கூறினார். எதிரி செயல்படவோ அல்லது மீண்டு வரவோ அவகாசம் அளிக்கக்கூடாது என்று தெரிவித்தார். திடீர் தாக்குதல் என்பது வழக்கமான முறைகள் அல்லது மின்னணு முறைகளில் என்று பல வடிவங்களில் இருக்கலாம். நம்முடைய உளவு, கண்காணிப்பு அமைப்புகளை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார். நமது வீரர்கள் புதிய சவாலை எதிர்கொள்ளும் வகையில் விழிப்புடனும், சுறுசுறுப்பாகவும், தயார்நிலையில் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்று குறிப்பிட்டார்.

தற்போதைய மோதல்கள் பாரம்பரிய போர் முறைகளுக்கு அப்பால் நேரடி தொடர்பற்ற தளங்களாக விரிவடைந்துள்ளன என்றும் இவற்றின் ஏவுகணைகள், ட்ரோன்கள், நவீன ஆயுத அமைப்பு முறைகள், முக்கிய பங்களிப்பதாக திரு ராஜ்நாத் சிங் கூறினார். ரஷ்யா – யுக்ரைன், இஸ்ரேல் – ஹமாஸ் மோதல்கள் குறித்து சுட்டிக்காட்டிய அவர், நவீன போர் முறையில் ட்ரோன்களும், வான்பாதுகாப்பு அமைப்புகளும் மிக முக்கிய அம்சங்களாக உருவெடுத்துள்ளதாக தெரிவித்தார். காமிகாசே ட்ரோன்கள், கண்காணிப்பு முறைகள், ட்ரோன் எதிர்ப்பு நடவடிக்கைகள் போன்ற புதிய சவால்களை எதிர்கொள்ள தயாராக இருக்குமாறும் தளபதிகளுக்கு அறிவுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2335351&reg=3&lang=1

***

SS/IR/SM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2335401) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Kannada