பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்தியா – மியான்மர் முப்படைகளுக்கு இடையிலான முதலாவது கூட்டு பேரிடர் மீட்புப் பயிற்சி சென்னையில் நடைபெற்றது

இடுகை இடப்பட்ட நாள்: 06 NOV 2026 5:56PM by PIB Chennai

‘மனிதகுலத்திற்காக ஒன்றிணைவோம்; கூட்டு ஒத்துழைப்பின் மூலம் வலுப்பெறுவோம்’ என்ற கருப்பொருளில், இந்தியா – மியான்மர் முப்படைகளுக்கு இடையிலான முதலாவது கூட்டு பேரிடர் மீட்புப் பயிற்சி, ‘ரஹத் மித்ரா’ என்ற பெயரில் சென்னையில் நடைபெற்றது. 2026 நவம்பர் 5, 6 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்ற இப்பயிற்சி, இரு நாடுகளின் பாதுகாப்புப் படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு, பரஸ்பர நம்பிக்கை, ஒருங்கிணைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு அமைந்தது.

இந்தியா, மியான்மர் நாடுகளின் முப்படைகளைச் சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட வீரர்கள் இதில் பங்கேற்றனர். பேரிடர் காலங்களில் மனிதாபிமான உதவிகளை வழங்குவது தொடர்பாக அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவும், இணைந்து செயல்படும் திறனை மேம்படுத்தவும் இப்பயிற்சி உதவும்.

இந்தியக் கடற்படையின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இப்பயிற்சி, இரு நாடுகளின் பாதுகாப்பு ஒத்துழைப்பையும் நீண்டகால நட்புறவையும் மேலும் வலுப்படுத்தும்.

அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற இந்தியாவின் கொள்கை, ‘மஹாசாகர்’ தொலைநோக்குப் பார்வை ஆகியவற்றை இது உறுதிப்படுத்துவதுடன், பிராந்திய அமைதி, பாதுகாப்பு, பேரிடர் கால மனிதாபிமான உதவிகள் ஆகியவற்றை மேம்படுத்தவும் துணைபுரியும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2333709&reg=3

***

TV/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2335353) வருகையாளர் எண்ணிக்கை : 20
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Assamese