சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தில்லியில் நடைபெறும் ஷில்ப் சமகம் மேளா 2026-ஐ மத்திய அமைச்சர் திரு ராம்தாஸ் அதவாலே பார்வையிட்டார்

இடுகை இடப்பட்ட நாள்: 06 NOV 2026 8:38PM by PIB Chennai

மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகம் சார்பாக தில்லியில் நடைபெற்று வரும் 'ஷில்ப் சமகம் மேளா 2026' கண்காட்சியை, அத்துறைக்கான இணையமைச்சர் திரு ராம்தாஸ் அதவாலே இன்று பார்வையிட்டார். மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு, பொது விநியோகத் துறை இணையமைச்சர் திருமதி நிமுபென் ஜெயந்திபாய் பாம்ஹானியா, முக்கிய அதிகாரிகள் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.

130-க்கும் மேற்பட்ட அரங்குகள் மூலம், இந்த மேளாவில் பலதரப்பட்ட கைவினைப் பொருட்கள், கைத்தறிப் பொருட்கள், பாரம்பரிய ஜவுளிகள் மற்றும் பிற உள்நாட்டுப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இந்தக் கண்காட்சிகள் மூலம், பட்டியலினத்தவர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் துப்புரவுத் தொழிலாளர் சமூகங்களைச் சேர்ந்த 1,000-க்கும் மேற்பட்ட கைவினைஞர்கள், தங்களது தயாரிப்புகளைக் காட்சிப்படுத்தவும் சந்தைப்படுத்தவும் வாய்ப்புக் கிடைத்துள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.

இந்த நிகழ்வானது, பாரம்பரிய கைவினைத்திறன், கைத்தறிப் பொருட்கள், நேரடி கைவினை செயல்விளக்கங்கள் மற்றும் கலாச்சார நிகழ்ச்சிகளை ஒன்றிணைப்பதோடு, தொழில்முனைவு, வாழ்வாதார உருவாக்கம் மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பங்கேற்பையும் ஊக்குவிக்கிறது என்று அமைச்சர் திரு. அதவாலே கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2333799&reg=48&lang=2

***

TV/RB/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2335348) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi