இடுகை இடப்பட்ட நாள்:
11 NOV 2026 7:05PM by PIB Chennai
மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் சார்பில் தூய்மையை வலியுறுத்தவும், நிலுவையில் உள்ள பொதுமக்களின் கோரிக்கை மனுக்களுக்குத் தீர்வு காணவும் கடந்த அக்டோபர் மாதம் 'சிறப்பு பிரச்சாரம் 6.0' நாடு முழுவதும் தீவிரமாக நடத்தப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக, நாடு முழுவதும் உள்ள அங்கன்வாடி மையங்கள், குழந்தைகள் காப்பகங்கள் உள்ளிட்ட 12 லட்சத்திற்கும் மேற்பட்ட இடங்களில் ஒரே நாளில் பிரம்மாண்ட தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும், ஊட்டச்சத்து கண்காணிப்பு , பிஎம்எம்விஒய் மற்றும் சிபிஜிஆர்ஏஎம்எஸ் ஆகிய இணையதளங்கள் மூலம் பெறப்பட்ட 51,090 பொதுமக்களின் குறைதீர்ப்பு மனுக்களுக்கு ஒரே நாளில் தீர்வு காணப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
ஆண்டு முழுவதும் தூய்மைப் பணியில் ஈடுபடும் தூய்மைப் பணியாளர்களின் சேவையைப் பாராட்டி, அவர்களுக்குப் புதிய சீருடைகளும் விருதுகளும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2335167®=3&lang=1
***
SK/VK/RJ