இடுகை இடப்பட்ட நாள்:
11 NOV 2026 7:45PM by PIB Chennai
மத்திய பழங்குடியினர் நல அமைச்சகம், பழங்குடியினர் தலைவரான பிர்சா முண்டாவின் பிறந்தநாளான நவம்பர் 15-ம் தேதியையொட்டி, நவம்பர் 1 முதல் 15 வரை நாடு முழுவதும் பழங்குடியின கௌரவ இருவார விழாவைக் கடைப்பிடிக்கிறது.
இதன் ஒரு பகுதியாக, குடியரசுத்தலைவருடன் ஏகலைவா மாதிரி உண்டுஉறைவிடப் பள்ளி மாணவர்களின் கலந்துரையாடல், தேசிய பழங்குடியினர் இலக்கியத் திருவிழா, ராணி துர்காவதி பழங்குடியினர் மகளிர் மாநாடு, பாரம்பரிய மருத்துவர்களுக்கான பயிற்சி ஆகிய நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
நவம்பர் 15 அன்று பழங்குடியினர் கௌரவ தினத்தில் 300-க்கும் மேற்பட்ட வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டு, பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட உள்ளது. மேலும் பழங்குடியினர் சுகாதாரத் தரவுகளுக்கான ஜன்-ஹிட் தளம், வன உரிமைச் சட்டத்திற்கான தேசிய டிஜிட்டல் தளம் ஆகிய இரண்டு முன்னோடி இணையதளங்களும் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2335189®=48&lang=2
***
TV/PD/RJ