பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

எதிர்கால போர் சூழலுக்கு கூட்டு நடவடிக்கையும், ஒருங்கிணைப்பும் இன்றியமையாதவை – ராணுவ தலைமைத் தளபதி

இடுகை இடப்பட்ட நாள்: 11 NOV 2026 6:27PM by PIB Chennai

ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் தீரஜ் சேத் 2026 நவம்பர் 11 அன்று புதுதில்லி மானெக்ஷா மையத்தில் இந்திய துணைக் கண்டத்தில் எதிர்காலப் போருக்கான தொலைநோக்குப் பார்வை என்ற தலைப்பில் உரையாற்றினார். குதிரைப்படை அதிகாரிகள் சங்கமும், இயந்திரமயமாக்கப்பட்ட படைகளின் தலைமை இயக்குநரகமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்த இரண்டு நாள் கருத்தரங்கம் போரின் மாறிவரக்கூடிய தன்மை குறித்து விவாதிப்பதற்காக உயர் ராணுவ அதிகாரிகள், முன்னாள் வீரர்கள், பாதுகாப்புபடை விஞ்ஞானிகள், தொழில்துறைப் பிரதிநிதிகள் ஆகியோரை ஒருங்கிணைக்கிறது.

அப்போது பேசிய ராணுவ தலைமைத் தளபதி, வளர்ந்து வரும் செயல்பாட்டு சவால்களை எதிர்கொள்ள இந்திய ராணுவம் மேற்கொண்டு வரும் மாற்றங்கள் தொடர்பாக எடுத்துரைத்தார்.  மாற்றம் என்பது நவீன உபகரணம், நிறுவன மறுசீரமைப்பு ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டது என்றும், போர்வீரரை மையமாகக் கொண்டு புதுமைக் கண்டுபிடிப்பு, தொழில்நுட்பத்தைப் பின்பற்றுதல், விரைவான செயல்பாடு ஆகியவை தேவை என்று வலியுறுத்தினார்.

எதிர்கால போர் சூழலுக்கு கூட்டு நடவடிக்கையும், ஒருங்கிணைப்பும் இன்றியமையாதவை என்று எடுத்துரைத்த ராணுவ தளபதி, படைகள், களங்கள் ஆகியவற்றில் தடையற்ற ஒருங்கிணைப்பின் அவசியம் குறித்து சுட்டிக்காட்டினார். அத்துடன் உள்நாட்டு திறன் மேம்பாடு, தொழில்துறை, கல்வி நிறுவனம் ஆகியவற்றுடனான வலுவான நட்புறவுகள் மூலம் தற்சார்புக்கான இந்திய ராணுவத்தின் உறுதிப்பாட்டை அவர் வலியுறுத்தினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2335144&reg=3&lang=1

***

SS/IR/SM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2335343) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese