இடுகை இடப்பட்ட நாள்:
12 NOV 2026 12:12PM by PIB Chennai
இந்தியாவில் இயற்கை மருத்துவம் என்பது அதன் பாரம்பரியமான இயற்கை வழி சிகிச்சை என்பதற்கு அப்பால் அறிவியல் சார்ந்த ஆராய்ச்சி, மருத்துவ மதிப்பீடு, நோய் தடுப்பு சார்ந்த சுகாதார பராமரிப்பு என்று சூழலை நோக்கி மெதுவாக நகர்கிறது. வாழ்க்கைமுறை சார்ந்த பிரச்சனைகள், உடல்பருமன், மனஅழுத்தம், ஆரோக்கியமான முதுமை தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்து வரும் சூழலில் ஊட்டச்சத்து, இயற்கை சிகிச்சைகள் ஆகியவை மீண்டும் முக்கியத்துவம் பெறுகிறது.
கர்நாடக மாநிலம் நாகமங்கலாவில் உள்ள மத்திய யோகா, இயற்கை மருத்துவத்திற்கான ஆராய்ச்சி நிறுவனத்தில் 2026 நவம்பர் 18 அன்று 9-வது தேசிய இயற்கை மருத்துவ தினம் இயற்கை மருத்துவம், ஆரோக்கியமான இந்தியா என்ற தலைப்பின் கீழ் கொண்டாடப்படவுள்ளது.
இயற்கை மருத்துவம் குறித்தும், ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், நோய்களைத் தடுத்தல், ஆரோக்கியமான வாழ்க்கைமுறையைக் கடைபிடிப்பதில் அதன் பங்களிப்பு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்நாள் கடைபிடிக்கப்படுகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2335313®=3&lang=1
***
SS/IR/SM/RJ