கலாசாரத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அருணாச்சலப் பிரதேசத்தில் சாக்கியமுனி புத்தரின் புனிதப் பொருட்களைப் பக்தர்கள் ஆர்வமுடன் காண்கின்றனர்

இடுகை இடப்பட்ட நாள்: 12 NOV 2026 11:42AM by PIB Chennai

அருணாச்சலப் பிரதேசத்தில் சாக்கியமுனி புத்தரின் புனிதப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிகழ்வு மக்களிடையே ஆழ்ந்த பக்தி உணர்வையும், ஆன்மிக ரீதியான, மரியாதையையும் ஏற்படுத்தியுள்ளது. இதுவரை மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 50,000 பேர் புனிதப் பொருட்களை வணங்கி உள்ளனர். இரண்டாம் வாரமாக நடைபெறும் இந்நிகழ்வு, அருணாச்சலப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரக்கூடிய பக்தர்கள் பிரார்த்திக்கவும், ஆசிகளைப் பெறவும், புனிதப் பொருட்களின் ஆன்மிக மகத்துவத்தை உணரவும் தொடர்ந்து வாய்ப்பளிக்கிறது.

இக்கண்காட்சி 2026 அக்டோபர் 31 அன்று காடன் நம்கியால் லாட்சே ஆலயத்தில் (தவாங் ஆலயம்) தொடங்கி நவம்பர் 7 அன்று நிறைவடைந்தது. அப்போது தவாங், அதன் அருகாமைப் பகுதிகளைச் சேர்ந்த 31,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆலயத்திற்கு சென்று பிரார்த்தித்து புனிதப் பொருட்களுக்கு மரியாதைச் செலுத்தினார்கள்.

இக்கண்காட்சி தவாங்கில் நிறைவடைந்ததைத் தொடர்ந்து 2026 நவம்பர் 8 அன்று அந்த புனிதப் பொருட்கள் பொம்டிலாவில் உள்ள துப்சோக் காட்செல் லிங் ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்டது. இந்நிகழ்விற்கு உள்ளூர் மக்களிடமிருந்தும் அருகே உள்ள பகுதிகளைச் சேர்ந்த பக்தர்களிடமிருந்தும் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. 

மக்கள் அங்கு பெருமளவில் சென்று பிரார்த்தித்து நம்பிக்கையுடன் புனிதப் பொருட்களுக்கு மரியாதைச் செலுத்தி வருகின்றனர். நவம்பர் 13-ம் தேதி வரை புத்தரின் புனிதப் பொருட்கள் அங்கு காட்சிப்படுத்ததப்படும். அதன்பிறகு புனிதப்பொருட்கள் நம்சாயில் உள்ள கோல்டன் பகோடாவிற்கு எடுத்துச்செல்லப்பட்டு நவம்பர் 14 முதல் 20-ம் தேதி வரை பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்படும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2335304&reg=3&lang=1

***

SS/IR/SM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2335334) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati