பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

இந்திய–மியான்மர் கடற்படை பயிற்சியின் 8-வது பதிப்பு விசாகப்பட்டினத்தில் தொடங்கியது

இடுகை இடப்பட்ட நாள்: 11 NOV 2026 7:52PM by PIB Chennai

இந்திய-மியான்மர் கடற்படை பயிற்சியின் 8-வது பதிப்பு, 2026 நவம்பர் 10 முதல் 14 வரை விசாகப்பட்டினத்தில் நடைபெறுகிறது. இந்திய கடற்படையின் ராணா, சுமேதா கப்பல்களுடன் இதில் பங்கேற்பதற்காக, மியான்மர் கடற்படைக் கப்பலான கிங் சின் ஃபியூ ஷின், 2026 நவம்பர் 10 அன்று விசாகப்பட்டினத்தை வந்தடைந்தது. இருதரப்புப் பயிற்சியின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், 2026 நவம்பர் 10 அன்று ஐஎன்எஸ் ராணா கப்பலில் தொடக்க விழா நடைபெற்றது.

துறைமுக அளவிலான பயிற்சியில் தொழில்முறை கலந்துரையாடல்கள், துறைசார் நிபுணர் பரிமாற்றங்கள், கப்பல்களுக்கு இடையேயான சந்திப்புகள், விளையாட்டு நிகழ்வுகள், செயல்பாட்டு விஷயங்கள் குறித்த விவாதங்கள் ஆகியவை இடம்பெறும். அதனைத் தொடர்ந்து கடலில் நடைபெறும் பயிற்சியல் ஒருங்கிணைந்த கடல்சார் நடவடிக்கைகள், உத்திசார் செயல்பாடுகள், பயிற்சிகள் இடம்பெறும்.

இந்தக் கடல்சார் பயிற்சி, இந்தியாவிற்கும் மியான்மருக்கும்  இடையிலான நீடித்த நட்புறவையும் கடல்சார் கூட்டாண்மையையும் எடுத்துரைக்கிறது. இரு நாட்டுக் கடற்படைகளும் தங்களின் தொழில்முறை நிபுணத்துவத்தைப் பரிமாறிக்கொள்ளவும், பரஸ்பர புரிதலை வளர்த்துக்கொள்ளவும், செயல்பாட்டு ரீதியான ஒருங்கிணைப்பை மேலும் மேம்படுத்தவும் இந்த நிகழ்வு ஒரு வாய்ப்பை வழங்குகிறது. 

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2335191&reg=48&lang=2

****

SK/RB/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2335261) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , हिन्दी , Urdu