சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

முதலாவது பிம்ஸ்டெக் சுகாதார அமைச்சர்கள் மாநாடு கொழும்புவில் நடைபெற்றது

இடுகை இடப்பட்ட நாள்: 11 NOV 2026 5:05PM by PIB Chennai

பிம்ஸ்டெக் நாடுகளின் முதலாவது சுகாதார அமைச்சர்கள் மாநாடு இலங்கைத் தலைநகர் கொழும்புவில் நடைபெற்றது. இம்மாநாட்டில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜெ பி நட்டா கலந்துகொண்டார். இம்மாநாட்டில் பிராந்திய அளவிலான சுகாதாரப் பாதுகாப்பு, நிலையான சுகாதாரக் கட்டமைப்பை உருவாக்குதல் ஆகியவை தொடர்பாக எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டன. மேலும், 2026 முதல் 2030 வரையிலான பொதுச் சுகாதாரத்திற்கான திருத்தப்பட்ட செயல் திட்டம் அங்கீகரிக்கப்பட்டது. பாரம்பரிய மருத்துவத்துறையில் இந்தியாவின் பங்களிப்பை உயர்த்தும் வகையில் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் பிம்ஸ்டெக் பாரம்பரிய மருத்துவ மையத்தை இந்தியா அமைக்கவுள்ளது.

இம்மாநாட்டின் ஒரு பகுதியாக இந்தியா-இலங்கை சுகாதாரத்துறை அமைச்சர்களின் இருதரப்பு பேச்சுவார்த்தையின் போது, மத்திய அரசின் நிதியுதவியுடன் இலங்கைக்கு கூடுதலாக 100 அவசர சேவை ஊர்திகள் வழங்குவது குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. மேலும் இலங்கையின் சுகாதார சேவைகளை வலுப்படுத்த 50 மருத்துவ உதவி மையங்கள் அமைக்க உதவி வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது. நேபாள சுகாதாரத்துறை அமைச்சரையும் சந்தித்துப் பேசிய அமைச்சர் திரு ஜெ பி நட்டா, அண்டை நாடுகளுடன் சுகாதாரத் துறையில் உள்ள நீண்டகாலத் உறவுகளை மேலும் பலப்படுத்த இந்தியாவின் ‘அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை’ கொள்கை உறுதுணையாக இருக்கும் என்று தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2335080&reg=3&lang=1  

***

SK/PD/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2335260) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी