சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

போதைப்பொருள் பழக்கத்திலிருந்து தற்சார்பு நிலையை நோக்கிய பயணம்

இடுகை இடப்பட்ட நாள்: 11 NOV 2026 5:46PM by PIB Chennai

ராஜஸ்தான் மாநிலம் ராஜ்சமந்த் பகுதியைச் சேர்ந்த முகேஷ் (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்பவர் போதைப்பொருள் தடுப்பு செயல்திட்டத்தின் மூலம் போதைப் பழக்கத்திலிருந்து மீட்கப்பட்டு மருத்துவ சிகிச்சை மற்றும் ஆலோசனைகள் மூலம் மறுவாழ்விற்கான உதவிகள் வழங்கப்பட்டன.

இதன் மூலம் போதைப்பொருள் பழக்கத்திற்கு ஆளாகியுள்ள தனிநபர்கள் தங்களது வாழ்க்கையை மீண்டும் கட்டமைப்பதற்கும், பொருளாதார ரீதியில் தற்சார்பு நிலையை அடைவதற்கும் இந்தத் திட்டம் எவ்வாறு உதவுகிறது என்பதை அவரது இந்த வாழ்க்கைப் பயணம் உணர்த்துகிறது.

மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் இந்தத் திட்டத்தின் மூலம் ராஜ்சமந்த் மாவட்ட போதைப்பொருள் மீட்பு மையத்திலிருந்து உதவிகள் வழங்கப்பட்டு அவர் ஆரோக்கியமான வாழ்வியல் முறைக்குத் திரும்ப உதவியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2335121&reg=3&lang=1  

***

SK/SV/GS/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2335259) வருகையாளர் எண்ணிக்கை : 6
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी