உள்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

விசா நடைமுறைகளில் சீரமைப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 11 NOV 2026 7:39PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடியின் தலைமையிலும், மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷாவின் வழிகாட்டுதலிலும், மத்திய அரசு தனது விசா நடைமுறைகளை எளிமைப்படுத்தியுள்ளது. இந்தியாவுக்கு வருகை தரும் வெளிநாட்டினரின் தேவைகளுக்கு ஏற்ப, விசா முறையை மிகவும் சுருக்கமாகவும், சீரானதாகவும், பயனுள்ளதாகவும் மாற்றுவதே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும்.  

2026 ஆகஸ்ட் 27 அன்று, மத்திய உள்துறை அமைச்சகம், முதன்மை விசா வகைகளின் எண்ணிக்கையை 13-லிருந்து 9-ஆகவும், துணை விசா வகைகளின் எண்ணிக்கையை 49-லிருந்து 23-ஆகவும் குறைத்தது. இதற்கு முன்னதாக, 2025 அக்டோபரில் மேற்கொள்ளப்பட்ட சீரமைப்பின் ஒரு பகுதியாக, முதன்மை விசா வகைகள் 22-லிருந்து 13-ஆகவும், துணை விசா வகைகள் 63-லிருந்து 49-ஆகவும் குறைக்கப்பட்டன. இந்திய விசா நடைமுறைகளை எளிமைப்படுத்துவது குறித்து பரிசீலிக்கும்போது, வளர்ந்த நாடுகளின் விசா முறைகளையும் உலகளாவிய தரநிலைகளையும் இந்திய அரசு ஆய்வு செய்தது.

பொருத்தமான விசா வகையை அடையாளம் காண்பதில் கூடுதல் தெளிவையும் எளிமையையும் வழங்குவதுடன், முறையான வெளிநாட்டு வருகைகளை எளிதாக்குவதும், இந்த நடவடிக்கையின் நோக்கம் ஆகும். தற்போது, மின்னணு பயண அங்கீகாரத்தின் கீழ் 13 உட்பிரிவுகளில் மின்னணு விசா  நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த வசதி தற்போது 172 நாடுகளின் குடிமக்களுக்கு வழங்கப்படுகிறது.   

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2335182&reg=48&lang=2

****

SK/RB/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2335247) வருகையாளர் எண்ணிக்கை : 11
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese , Gujarati , Odia , Malayalam