வணிகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

லித்தியம்-அயன் மின்கலன் கழிவு ஏற்றுமதிக்கு தடை: வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் அறிவிப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 11 NOV 2026 4:07PM by PIB Chennai

மத்திய வர்த்தக துறையின் கீழ் உள்ள வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் ஐடிசி(எச்எஸ்) குறியீடு 85491400-ன் கீழ் உள்ள லித்தியம்-அயன் மின்கலன் ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது.  2026 நவம்பர் 10 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பு எண்.49/2026-27-ன் படி அப்பொருளின் ஏற்றுமதி கொள்கை தடையற்றது என்ற நிலையிலிருந்து தடை செய்யப்பட்டது என்ற நிலைக்கு உடனடியாக மறு அறிவிப்பு வரும் வரை திருத்தப்பட்டுள்ளது. 2023-ம் ஆண்டின் வெளிநாட்டு வர்த்தக கொள்கையின் பத்தி 1.05-ன் கீழ் உள்ள இடைக்கால ஏற்பாடுகள் பொருந்தும்.

ஐடிசி(எச்எஸ்) குறியீடு 85491400 முதன்மை செல்கள், முதன்மை மின் கலன்கள், மின் சேமிப்பான்களின் கழிவுகள், உதரிபாகங்கள் ஆகியவற்றையும் அத்துடன் தரம் பிரிக்கப்படாத, ஈயம், காட்மியம் அல்லது பாதரசம் இல்லாத பயன்படுத்தப்பட்ட செல்கள்,  மின்கலன் தொகுதிகள், சேமிப்பான்களை உள்ளடக்கியதாகும். இந்த அறிவிப்பு லித்தியம்-அயன் மின்கலன் கழிவு என்று குறிப்பிடுகிறது. கழிவு என்பது ஆயுட்காலம் முடிந்த லித்தியம்-அயன் மின்கலன் தொகுதிகள், மின்கலன் தொகுதி உற்பத்தி கழிவுகளை அழிப்பதன் மூலம் பெறப்படும் தூள் போன்ற பொருளாகும். இதில் லித்தியம், கோபால்ட், நிக்கல், மாங்கனீஸ் உள்ளிட்ட முக்கியமான கனிமங்கள் மீட்ககூடிய அளவிற்கு உள்ளன.

மின்சார வாகனங்கள், மேம்பட்ட ரசாயன செல் மின்கலன்கள், எரிசக்தி சேமிப்பு, மின்னணுவியல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆகியவற்றுக்கு முக்கிய கனிமங்கள் அத்தியாவசிய உள்ளீடுகளாகும். இந்தக் கனிமங்களில் பலவற்றை இறக்குமதி செய்வதை இந்தியா பெருமளவு சார்ந்துள்ளது. மின்கலன் கழிவுகளை மறுசுழற்சி செய்வதில் இந்த வளங்களின் உள்நாட்டு விநியோகத்தை உருவாக்குவதற்கான விரைவான, மிகவும் நிலையான வழிமுறைகளில் ஒன்றாகும். மின்கலன் கழிவுகளை மறுசுழற்சி செய்வதற்கும் அதிலுள்ள கனிமங்களை சுத்திகரிப்பதற்குமான திறன் அதிகரித்து இருந்தாலும் போதிய அளவு மூலப்பொருட்கள் கிடைக்காததால் அவை முழுமையாக பயன்படுத்தப்படவில்லை.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2335019&reg=3&lang=1

***

SK/IR/PS/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2335229) வருகையாளர் எண்ணிக்கை : 12
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Gujarati