இடுகை இடப்பட்ட நாள்:
11 NOV 2026 4:09PM by PIB Chennai
தூய்மைக்கான சிறப்பு இயக்கம் 6.0-ன் கீழ், மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் குடிநீர் மற்றும் துப்புரவுத் துறை சார்பில் அதன் அலுவலகங்களில் தூய்மையை நிலைநிறுத்துவதற்கும், நிலுவையில் உள்ள கோப்புகளை விரைந்து தீர்ப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 2026 அக்டோபர் 2 முதல் அக்டோபர் 31 வரை நடைபெற்ற இந்த இயக்கத்தின் மூலம் பணியிட மேலாண்மை, ஆவணப் பராமரிப்பு ஆகியவை சார்ந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன் தொடக்கமாகத் தூய்மை உறுதிமொழி ஏற்பு நிகழ்வும், காளிந்தி குஞ்ச் பகுதியில் தன்னார்வ சேவைகள் ஜல் சக்தித்துறை அமைச்சர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டன.
தூய்மைப் பணியாளர்கள் பயன் பெறும் விதமாக மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டன. மேலும் அலுவலகப் பணியாளர்கள் தூய்மை விழிப்புணர்வுப் போட்டிகளிலும், தூய்மைப் பணிகளிலும் பங்கேற்றனர். இச்சிறப்பு இயக்கத்தின் போது பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட நூற்றுக்கணக்கான புகார்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகள், அரசின் பல்வேறு குறிப்பாணைகள் ஆகியவை உரிய காலத்தில் பரிசீலிக்கப்பட்டு விரைந்து தீர்வு காணப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2335021®=3&lang=1
****
SK/PD/RJ