இடுகை இடப்பட்ட நாள்:
10 NOV 2026 9:48PM by PIB Chennai
சர்வதேச நாடுகளுடனான ஒத்துழைப்பு, ஏற்றுமதி சார்ந்த வளர்ச்சி நடவடிக்கைகள் மூலம் உலகின் உற்பத்தி மையமாக இந்தியாவை நிலைநிறுத்த வேண்டும் என்று மத்திய வர்த்தகத் துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் அழைப்பு விடுத்துள்ளார்.
புதுதில்லியில் நடைபெற்ற சர்வதேச பாரத் வாகன உற்பத்தி கண்காட்சியின் முன்னோட்ட நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், நாட்டின் உற்பத்தி மற்றும் சர்வதேச அளவிலான பொருளாதார மேம்பாட்டிற்கு வாகன உற்பத்தி துறையின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.
போக்குவரத்து துறையில் உள்நாட்டு சந்தை வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வதுடன் ஏற்றுமதியையும் அதிகரிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார். வாகன உற்பத்தித் துறையில் உள்நாட்டுச் சந்தைகளுடன் சர்வதேச சந்தை வாய்ப்புகளை இணைப்பதன் மூலம் போட்டித் தன்மையை அதிகரிக்க முடியும் என்று அவர் கூறினார்.
ஜப்பான் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கும், விண்வெளி, பாதுகாப்புத் துறைகளுக்குத் தேவையான பொருட்களை வழங்கும் வகையில் உலக அளவிலான தர நிலையைப் பூர்த்தி செய்யும் ஆற்றலை இந்திய உற்பத்தியாளர்கள் கொண்டுள்ளதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்தக் கண்காட்சி போக்குவரத்து துறையுடன் தொடர்புடைய பல்வேறு துறைகளை ஒருங்கிணைப்பதன் மூலம் அரசின் செயல்திட்டங்களை முழுமையாக நிறைவேற்ற உதவிடும் என்று அவர் கூறினார். எஃகு, ரசாயனம், மின்னணுவியல், வாகன உற்பத்தி, கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் இதில் அடங்கும் என்று திரு பியூஷ் கோயல் கூறினார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2334866®=3&lang=1
***
SS/SV/GS/SH