அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை
azadi ka amrit mahotsav

நீடித்த கட்டுமானத்திற்கான ஆதார வளமாகத் தொழில்துறை கழிவுகளைப் பயன்படுத்துவதற்கான தொழில்நுட்பம் குறித்த ஆய்வு

இடுகை இடப்பட்ட நாள்: 11 NOV 2026 10:38AM by PIB Chennai

நீடித்த கட்டுமானத்திற்கான ஆதார வளங்களாகத் தொழில்துறை கழிவுகளைப் பயன்படுத்துவதற்கான தொழில்நுட்பம் குறித்து இந்தியா – நார்வே நாடுகள் ஆய்வு மேற்கொண்டுள்ளன. புதுதில்லியில் உள்ள இந்திய வாழ்விட மையத்தில் நேற்று (10.11.2026) நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

இந்திய அறிவியல், தொழில்துறை ஆராய்ச்சி குழுமம், நார்வே ஆராய்ச்சி குழுமம் ஆகியவை இணைந்து இந்தக் கலந்துரையாடல் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன. இந்த நிகழ்ச்சியில் தொழில்துறை நிறுவனங்கள், எஸ்ஐஎன்டிஇஎஃப், ஒழுங்குமுறை ஆணையம், சிமெண்ட் உற்பத்தி நிறுவனங்கள், கட்டுமானத் துறையைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இதில், நீடித்த கழிவு மேலாண்மை, வளங்களை மீட்டெடுப்பதற்கான கூட்டு முயற்சிகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

கடந்த மே மாதம் பிரதமர் திரு நரேந்திர மோடி மேற்கொண்ட நார்வே பயணத்தின் போது அந்நாட்டுப் பிரதமர் திரு ஜோனஸ் கார் ஸ்டோருடன் நடத்திய பேச்சு வார்த்தையின் போது இரு நாடுகளுக்கிடையேயான நட்புறவுகள் குறித்தும், உத்திசார் கூட்டு நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது. சுழற்சி அடிப்படையிலான பொருளாதார வளர்ச்சி, தூய்மை தொழில்நுட்பம், மேம்பட்ட ஆராய்ச்சி ஆகியவற்றை மையமாகக் கொண்டு உத்திசார் நடவடிக்கைகளில் இரு நாடுகளும் இணைந்து செயல்படுவது குறித்து விவாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2334888&reg=3&lang=1

***

SS/SV/GS/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2334951) வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Bengali , Gujarati , Telugu