சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
10 NOV 2026 6:07PM by PIB Chennai
போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்கும் நோக்கில், மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகம் சார்பில் ‘போதைப்பொருள் இல்லாத இளைஞர்கள், வளர்ச்சியடைந்த இந்தியா’ என்ற இணையவழி வினாடி வினாப் போட்டி 2026 அக்டோபர் 26-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இன்றைய (நவம்பர் 10) நிலவரப்படி, இதில் 25,607-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர். 2026 நவம்பர் 25 வரை இதில் அனைத்துத் தரப்பினரும் பங்கேற்கலாம்.
இந்த வினாடி வினாவில் 20 கேள்விகளுக்கு 10 நிமிடங்களில் பதிலளிக்க வேண்டும். பங்கேற்பை நிறைவு செய்பவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்படும். சரியான பதில்களையும் தெரிந்துகொள்ளலாம்.
பங்கேற்பதற்கான இணையதள இணைப்பு: https://mybharat.gov.in/quizzes/yuva/detail/Url9dlIwCinQVSf8lwPB9w/
இளைஞர்கள் உள்ளிட்ட அனைவரும் இதில் பங்கேற்று போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்க ஒத்துழைக்குமாறு மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2334758®=3&lang=1
(Release ID : 2334758)
****
SK/PLM/SH