இடுகை இடப்பட்ட நாள்:
10 NOV 2026 6:32PM by PIB Chennai
பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ராணுவ விவகாரங்கள் துறை, 6-வது சிறப்புத் தூய்மை இயக்கத்தை 2026 அக்டோபர் 02 முதல் 31-ம் தேதி வரை நடத்தியது.
இதில், 8,507 இடங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மின்னணுக் கழிவுகள் உள்ளிட்ட பழைய பொருட்களை விற்றதன் மூலம் ரூ.89.68 கோடி வருவாய் கிடைத்தது.
மேலும், 5,28,443 ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு, 16,837 தேவையற்ற கோப்புகள் அகற்றப்பட்டன. இதன்மூலம் 3,53,291 சதுர அடி இடம் விடுவிக்கப்பட்டு, பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது. பொதுமக்களின் 2,905 புகார்களும், 466 மேல்முறையீடுகளும் தீர்க்கப்பட்டன.
தாம்பரம் விமானப்படைத் தளம், 60 முதல் 80 ஆண்டுகள் பழமையான 9 கிணறுகளைச் சீரமைத்து, தினமும் ஒரு லட்சம் லிட்டர் கூடுதல் தண்ணீர் கிடைக்க வழிவகுத்தது. மேலும், மும்பை ஐஐடி உதவியுடன் ஐஎன்எஸ் சிவாஜி கப்பற்படைத் தளம், உயிரி எரிபொருள் மூலம் நீராவியில் உணவு சமைக்கும் கருவியை நிறுவியது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2334772®=3&lang=1
(Release ID: 2334772)
****
SK/PLM/SH