சிறுபான்மையினர் நலன் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

2027 ஹஜ் பயணம் தொடர்பாக இந்தியா-சவுதி அரேபியா இடையே இருதரப்பு ஹஜ் ஒப்பந்தம் கையெழுத்தானது

இடுகை இடப்பட்ட நாள்: 09 NOV 2026 8:19PM by PIB Chennai

மத்திய சிறுபான்மையினர் நலன், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ சவுதி அரேபியாவில் 2026 நவம்பர் 6 முதல் 9-ம் தேதி வரை அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டார். அவருடன் சிறுபான்மையினர் நலன் அமைச்சகத்தின இணை செயலாளரும் (ஹஜ்), இந்திய ஹஜ் கமிட்டியின் தலைமைச் செயல் அதிகாரியும் சென்றிருந்தனர்.

2026 நவம்பர் 9 அன்று ஜித்தாவில் சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா பயணத்துறை அமைச்சர் டாக்டர் தவ்ஃபிக் பின் ஃபவ்சான் அல் ராபியா உடன் மத்திய அமைச்சர் இருதரப்பு சந்திப்பை நடத்தினார். 2027-ம் ஆண்டு ஹஜ் பயணத்திற்கான ஏற்பாடுகள் குறித்து நடைபெற்ற ஆக்கப்பூர்வமான பேச்சுகளில் சவுதி ஆரேபியாவுக்கான இந்திய தூதரும், இணை செயலாளரும்(ஹஜ்) பங்கேற்றனர். அப்போது, 2027 ஹஜ் பயணத்திற்கான தற்போதைய முன்னேற்பாடுகள் குறித்து அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். இருதரப்பு ஒருங்கிணைப்பு, சரக்கு போக்குவரத்து ஆதரவை வலுப்படுத்துவது குறித்து விவாதித்தனர். ஒவ்வொரு இந்திய ஹஜ் யாத்திரிகரின் பாதுகாப்பான, இலகுவான, வசதிகளுடன் கூடிய யாத்திரியைக்கு தங்களுடைய பகிரப்பட்ட உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்கள். இச்சந்திப்பை தொடர்ந்து 2027 ஹஜ் பயணம் தொடர்பாக இந்தியா-சவுதி அரேபியா இடையே இருதரப்பு ஹஜ் ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்மூலம், 1,75,025  இந்தியர்கள் ஹஜ் பயணம் செய்வது உறுதிசெய்யப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2334463&reg=3&lang=1

***

SK/IR/PS/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2334841) வருகையாளர் எண்ணிக்கை : 5
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Bengali