புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
10 NOV 2026 4:00PM by PIB Chennai
மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்தின் கீழ் செயல்படும் தேசிய புள்ளியியல் அலுவலகத்தால் நடத்தப்பட்ட காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பின் ஜூலை-செப்டம்பர் 2026 காலாண்டுக்கான ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி, நாடு முழுவதும் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கான ஒட்டுமொத்த தொழிலாளர் பங்கேற்பு விகிதம் கடந்த காலாண்டில் 54.6% ஆக இருந்த நிலையில், நடப்பு காலாண்டில் 55.5% ஆக உயர்ந்துள்ளது. கிராமப்புறங்களில் இந்த விகிதம் 58.1% ஆக அதிகரித்துள்ளது. இதேபோல், ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு விகிதம் முந்தைய காலாண்டில் 51.7%-லிருந்து 52.7% ஆக உயர்ந்துள்ளது. கிராமப்புற வேலைவாய்ப்பு விகிதம் 55.6% ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பின்மை விகிதம் முந்தைய காலாண்டில் 5.4% ஆக இருந்த நிலையில், நடப்பு காலாண்டில் 5.1% ஆகக் குறைந்துள்ளது. கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை விகிதம் 4.8%-லிருந்து 4.3% ஆகக் குறைந்துள்ளது. நகர்ப்புறங்களில் இது 6.8% ஆக உள்ளது. கிராமப்புற விவசாயத் துறையில் வேலைவாய்ப்பு 56.7% ஆக உயர்ந்துள்ளது. நடப்பு காலாண்டில் 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் சராசரியாக 57.9 கோடி பேர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் 40.5 கோடி பேர் ஆண்களும், 17.4 கோடி பேர் பெண்களும் ஆவர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2334642®=3&lang=1
****
SK/PD/SH