இடுகை இடப்பட்ட நாள்:
10 NOV 2026 3:44PM by PIB Chennai
வேளாண், விவசாயிகள் நலத்துறை இணையமைச்சர் திரு ராம்நாத் தாக்கூர், மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஐசிஎஆர்- மத்திய மீன்வளக் கல்வி நிறுவனத்தைப் பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய அமைச்சர் திரு ராம்நாத் தாக்கூர், வேளாண் துறையை மேம்படுத்த மத்திய மாநில அரசுகள், வேளாண் ஆராய்ச்சி நிறுவனங்கள், முதலீட்டாளர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என தெரிவித்தார். வேளாண் உற்பத்தி, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக ஒருங்கிணைந்த ஆராய்ச்சி, தொழில்நுட்பப் பரவல், நிறுவனங்களுக்கு இடையேயான ஒத்துழைப்பு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். மண் வளம், இயற்கை வளங்களை பாதுகாப்பது, ரசாயன பயன்பாட்டை குறைப்பது போன்றவற்றின் மூலம் இயற்கை விவசாயத்தை மேம்படுத்த முடியும் எனவும் கூறினார். பொருளாதார ரீதியில் விவசாயிகளுக்குச் சாதகமான அம்சங்களையும், சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்நுட்பங்களை பயன்படுத்தியும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஞ்ஞானிகளை அவர் கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியில் மேற்கு வங்க மாநில வேளாண் அமைச்சர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2334649®=3&lang=1
***
SS/LN/SH