தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
10 NOV 2026 5:17PM by PIB Chennai
மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகத்தின் அஞ்சல்துறை இண்டிகோ நிறுவனத்தின் ஒருங்கிணைப்புடன் விமானத்தில் பயணிக்கும்போது அஞ்சல் அட்டை எழுதும் டிஜிட்டல் டிடாக்ஸ் 2.0-ன் இரண்டாம் பதிப்பிற்கு ஏற்பாடு செய்திருந்தது. பண்டிகை காலத்தையொட்டி, தங்கள் கையால் எழுதப்பட்ட அஞ்சல் அட்டை மூலம் தங்களுடைய அன்புக்குரியவர்களுக்கு மனமார்ந்த தீபாவளி வாழ்த்துகளை கூறுவதற்கான தனித்துவமான வாய்ப்பு பயணிகளுக்குக் கிடைத்தது.
சண்டிகர், ராஞ்சி, பாக்டோக்ரா, தில்லி, மும்பை, கோவா, புனே, அகமதாபாத், கொல்கத்தா, வாரணாசி உள்ளிட்ட 11 இடங்களில் 15 இண்டிகோ விமானங்களில் இந்த இயக்கம் நடத்தப்பட்டது. பயணிகளுக்கு பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட டிஜிட்டல் டிடாக்ஸ் தொகுப்பு வழங்கப்பட்டது. அதில் அஞ்சல் அட்டைகள், வாழ்த்து அட்டைகள், பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒட்டும் தாள்கள் மூலம் பயணிகளே உருவாக்க கூடிய அஞ்சல் அட்டைகள் இருந்தன. இது அவர்களை திரைகளை காண்பதிலிருந்து சிறிது நேரம் விலகி சுயமாக பண்டிகை செய்திகளை எழுத ஊக்குவித்தது.
இந்த முன்முயற்சியை மனமகிழ்ந்து வரவேற்ற பயணிகள் இந்த இயக்கத்தின் நினைவுகூரத்தக்க அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2334710®=3&lang=1
***
SS/IR/PS/SH