சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

அடிமைப் போக்கிலிருந்து மீட்சி

இடுகை இடப்பட்ட நாள்: 09 NOV 2026 7:11PM by PIB Chennai

உத்தரப் பிரதேசத்தின் சுல்தான்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயதான ரமேஷ் குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது), போதைப்பொருள் மீதான அடிமைத்தனத்தினால் பெரும் சவால்களை எதிர்கொண்டார். இந்த நிலை அவரது உடல் மற்றும் மனநலம், சமூக உறவுகள் பொருளாதார நிலைத்தன்மை ஆகியவற்றில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியது.

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் 'போதைப்பொருள் தடுப்புக்கான தேசிய செயல்திட்டத்தின்' கீழ் இயங்கும்  போதைப்பொருள் மீட்பு மையத்தின் தலையீட்டின் மூலம் அவருக்கு ஒரு புதுய வாழ்வு கிடைத்தது.  மருத்துவ சிகிச்சை, மறுவாழ்வு வசதிகள், சுகாதாரச் சேவைகள், பாதுகாப்பான தங்குமிடம், இதர அத்தியாவசிய வசதிகளை அந்த மையம் வழங்கியது.

மருத்துவ சிகிச்சையுடன், அவருக்குத் தொடர்ச்சியான ஆலோசனை, ஊக்கம், யோகா பயிற்சிகள், உணர்வுபூர்வமான வழிகாட்டுதல்களும் வழங்கப்பட்டன. இதன்மூலம், இன்று, ரமேஷ் குமார் சொந்தமாகத் தொழில் ஒன்றைத் தொடங்கி, தனது பொருளாதார நிலையை மேம்படுத்திக்கொண்டு, முன்னெப்போதையும் விட நிதி ரீதியான ஸ்திரத்தன்மையை எட்டியுள்ளார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2334440&reg=3&lang=1

***

SK/BR/GS


(வெளியீட்டு அடையாள எண்: 2334575) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese , Punjabi