பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

உக்ரைன் அதிபருடன் பிரதமர் உரையாடினார்

இடுகை இடப்பட்ட நாள்: 09 NOV 2026 6:59PM by PIB Chennai

பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று உக்ரைன் அதிபர் திரு‌ வோலோடிமிர் ஜெலென்ஸ்கியுடன் தொலைபேசி வாயிலாக உரையாடினார்.

தற்போதைய மோதல் தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் குறித்த தனது பார்வையை அதிபர் திரு ஜெலென்ஸ்கி பகிர்ந்து கொண்டார்.

இந்தியாவின் மனிதநேயம் சார்ந்த அணுகுமுறையை மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், பேச்சுவார்த்தை, ராஜதந்திரத்தின் மூலமே மோதலைத் தீர்க்க வேண்டும் என்ற இந்தியாவின் நிலையான நிலைப்பாட்டை பிரதமர் மீண்டும் வலியுறுத்தினார். மோதலுக்கு அமைதியான தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்ட அனைத்து முயற்சிகளுக்கும் பங்களிக்க இந்தியா தயாராக உள்ளது என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.

இரு நாட்டு மக்களுக்கும் பரஸ்பர நன்மையளிக்கும் வகையில், இந்திய-உக்ரைன் இருதரப்பு ஒத்துழைப்பை பல்வேறு துறைகளில் மேலும் வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2334434&reg=3&lang=1

****

SK/BR/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2334473) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Gujarati