இடுகை இடப்பட்ட நாள்:
09 NOV 2026 6:10PM by PIB Chennai
இந்திய ரயில்வே துறை சார்பில், 2026 அக்டோபர் 2 முதல் 31-ம் தேதி வரை தூய்மைப் பணி நடைபெற்றது. சிறப்பு தூய்மை இயக்கம் 6 மூலம், தூய்மைப்பணி, பழைய கழிவுகளை அகற்றுதல், மின் கழிவு மேலாண்மை, கோப்புகள் மேலாண்மை உள்ளிட்டவை வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே துறை தெரிவித்துள்ளது. ரயில் நிலையங்கள், ரயில்வே அலுவலகங்கள் என 1 லட்சத்துக்கும் மேற்பட்ட இடங்களில் தூய்மைப்பணி நடைபெற்றது. பழைய கழிவுப்பொருட்கள் விற்பனை மூலம் 628.49 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரைத்த மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. ரயில்வே ஊழியர்களின் ஒத்துழைப்புடன் இந்த தூய்மைப்பணி சாத்தியமானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2334410®=3&lang=1
****
SK/LN/SH