இடுகை இடப்பட்ட நாள்:
09 NOV 2026 5:11PM by PIB Chennai
யமுனை ஆற்றில் பொழுதுபோக்கு உல்லாசப் பயண சேவை தொடங்க உள்ளது. இதன்மூலம் தில்லி சுற்றுலாத்துறை ஒரு புதிய கவனம் பெறும். துணை நிலை ஆளுநர் திரு சர்தார் தரண்ஜித் சிங் சாந்து, தில்லி முதலமைச்சர் திருமதி ரேகா குப்தா ஆகியோர் முன்னிலையில் மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து, நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் 2026 நவம்பர் 10 அன்று சோனியா விஹாரில் சொகுசு படகு சேவையை தொடங்கி வைக்கிறார்.
சோனியா விஹார் – ஜெகத்பூர் ஆற்றுப்பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள இம்முயற்சி, ஆறுகள் சார்ந்த சுற்றுலாவை ஊக்குவிப்பதையும், தேசியத் தலைநகரில் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு புதிய பொழுதுபோக்கு அனுபவத்தை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.
2016-ம் ஆண்டின் தேசிய நீர்வழிகள் சட்டத்தின் கீழ், யமுனை ஆறு தேசிய நீர்வழி 110 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. தில்லியில் உள்ள யமுனை ஆற்றில் சோனியா விஹார் – ஜெகத்பூர் பகுதியில் பொழுதுபோக்கிற்கு ஆற்றுவழி பயணச் சேவையை மேம்படுத்துவது தேசிய நீர்வழிப் பகுதியில் ஆறுகள் சார்ந்த சுற்றுலாவிற்கு பயன்படுத்துவதற்கான ஒரு முக்கிய அம்சமாகும்.
இச்சேவை தொடங்குவதற்கு முன்பாக, கடந்த மாதம் இந்திய நீர்வழி ஆணையம், தில்லி அரசின் உயரதிகாரிகள் முன்னிலையில் சொகுசுப் படகின் சோதனை ஓட்டங்கள் வெற்றிகரமாக நடத்தப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2334385®=3&lang=1
****
SK/IR/LDN/SH