இடுகை இடப்பட்ட நாள்:
31 JUL 2026 11:47PM by PIB Chennai
அவதூறான விமர்சனங்களால் எதற்கும் தீர்வுகாண முடியாது என்றும், வழி தவறிய இளைஞர்களுக்கு நல்வழி காட்டப்பட வேண்டும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.
புதுதில்லியில் உள்ள ஜந்தர்மந்தரில் நடந்த ஆர்ப்பாட்டம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள பிரதமர், தன்மீதும், மறைந்த தனது தாயார் மீதும் அவதூறான வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டதை நாட்டு மக்களும் உலக நாடுகளும் கவனித்ததாக குறிப்பிட்டுள்ளார். இத்தகைய நடத்தைகள் மீது சமூகத்தில் கோபம் எழுவது இயல்பான ஒன்று என்றபோதிலும், இளம் வயது என்பது தவறுகள் நடக்கக்கூடிய காலகட்டம் என்றும், அவ்வப்போது தவறுகளை திருத்திக்கொள்ள வாய்ப்புள்ளது என்றும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
வழிதவறிய அத்தகைய சிறார்களை தண்டிப்பதோ, நீதிமன்ற நடைமுறைகளுக்கு இட்டுச்செல்வதோ அல்லது சமூக ரீதியிலான துன்புறுத்தல் செய்வதோ கூடாது. மாறாக, அவர்களை அரவணைத்து சரியான பாதையை காட்ட வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்துள்ளார். தாம் அவர்களை மன்னிக்க விரும்புவதாக கூறிய அவர், சமூகமும் இதே உணர்வை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டிற்காக ஒன்றிணைந்து முன்னேறவும், தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்ளவும் தங்களது கனவுகளை நனவாக்கவும் இளைஞர்களுக்கு பிரதமர் அழைப்பு விடுத்தார். நாடு விரைவான முன்னேற்றம் கண்டுவருவதை சுட்டிக்காட்டியுள்ள அவர், ஒவ்வொரு இளைஞரும் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்பதே தனது விருப்பம் என்று தெரிவித்துள்ளார்.
நாட்டிற்காக அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என்று பிரதமர் திரு நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இளைஞர்களை சரியான திசையில் வழிநடத்துவது தொடர்பான காணொலிக் காட்சி ஒன்றை பிரதமர் திரு நரேந்திர மோடி பகிர்ந்துகொண்டுள்ளார்.
"அவதூறுகள் எதற்கும் தீர்வாகாது.
வழிதவறியவர்களுக்கு நல்வழி காட்டுவோம்.
ஒன்றிணைந்து செயல்படுவோம்.
நாட்டிற்காக பணியாற்றுவோம்."
***
Release ID: 2292824
TV/SV/LDN/SU