குடியரசுத் துணைத் தலைவர் செயலகம்
azadi ka amrit mahotsav

அயோத்தியில் தீபோற்சவ நிகழ்வு : குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

இடுகை இடப்பட்ட நாள்: 07 NOV 2026 9:39PM by PIB Chennai

உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள தீபோற்சவம் - 2026 விழாவை குடியரசு துணைத்தலைவர் திரு சி பி ராதாகிருஷ்ணன் 07.11.2026 அன்று தொடங்கி வைத்தார். லட்சக்கணக்கான அகல் விளக்குகளால் ஒளிர்ந்த படித்துறைகளைப் பார்வையிட்ட அவர், சரயு நதிக்கரையில் நடைபெற்ற ஆரத்தியிலும் பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் பேசிய குடியரசு துணைத்தலைவர், 2017-ம் ஆண்டு 1.7 லட்சத்துக்கும் மேற்பட்ட விளக்குகளுடன் தொடங்கிய இவ்விழா, 2025-ல் 26 லட்சத்துக்கும் அதிகமான விளக்குகளுடன் நடைபெற்றது. பத்தாவது ஆண்டான 2026-ல் 30 லட்சத்துக்கும் அதிகமாகவும், அயோத்தி முழுவதும் 70 லட்சத்துக்கும் அதிகமாகவும் விளக்குகள் ஏற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டது என்று குறிப்பிட்டார்.

இந்த விழா மக்களின் பங்கேற்பையும், இந்தியாவின் ஒற்றுமையான பக்தி உணர்வையும் வெளிப்படுத்துவதாகக் குடியரசு துணைத்தலைவர் குறிப்பிட்டார். மேலும், மண்பாண்டத் தொழிலாளர்கள், கைவினைக் கலைஞர்கள், கிராமப்புறப் பெண்கள் உள்ளிட்ட பலருக்கு வேலைவாய்ப்பையும் வருமானத்தையும் வழங்குவதாக அவர் கூறினார்.

இளைஞர்கள் ராமாயணத்தின் நற்போதனைகளைப் பின்பற்றுவதுடன், அறிவியல், தொழில்நுட்பத்தில் முன்னேறி, இந்தியப் பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் பாதுகாக்க வேண்டும் என திரு சி பி ராதாகிருஷ்ணன் வலியுறுத்தினார். முன்னதாக, ஸ்ரீ ராமர் ஆலயத்தில் அவர் வழிபாடு செய்தார்.

உத்தரப் பிரதேச ஆளுநர் திருமதி ஆனந்திபென் படேல், முதலமைச்சர் திரு யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரும் தீபோற்சவ விழாவில் பங்கேற்றனர்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2334045&reg=3&lang=1

***

SS/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2334192) வருகையாளர் எண்ணிக்கை : 9
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati , Malayalam