சமூக நிதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
02 NOV 2026 4:16PM by PIB Chennai
போதைப்பொருள் இல்லாத இந்தியா இயக்கம் திட்டத்தில் கோடிக்கணக்கான மக்கள் இணைந்துள்ளதாக மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தெரிவித்தார்.
தில்லியில் உள்ள இந்திரா காந்தி உள்விளையாட்டு அரங்கில், அகில விஸ்வ காயத்ரி பரிவார் ஏற்பாடு செய்திருந்த நூற்றாண்டு விழாவில் பங்கேற்றுப் பேசிய அவர், இதற்கான ஒருங்கிணைந்த உறுதிப்பாட்டை இந்த விழா மீண்டும் வலுயுறுத்துவதாக குறிப்பிட்டார்.
மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் அமைச்சகத்துடன் இணைந்து செயல்படுத்தப்படும் போதைப்பொருள் இல்லாத இந்தியா திட்டத்திற்கு, அகில விஸ்வ காயத்ரி அமைப்பு செய்து வரும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அமைச்சர் எடுத்துரைத்தார்.
ஆன்மீக விழிப்புணர்வை ஏற்படுத்துதல், கல்வி வழங்குதல், போதைப்பொருட்களின் தீய விளைவுகள் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு சேர்த்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம், போதைப்பொருளை சார்ந்திருப்பதற்கு எதிரான தேசிய இயக்கத்தை வலுப்படுத்த இந்த அமைப்பு பெரும் பங்காற்றியுள்ளது.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2331566®=3&lang=1
***
SS/SV/RJ