இடுகை இடப்பட்ட நாள்:
08 NOV 2026 2:49PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, சத்தீஸ்கர் மாநிலம் பஸ்தர் மாவட்டத்தில் உள்ள கரன்பூரில் அமைந்துள்ள கோப்ரா செயல்பாட்டுத் தளத்தில், ராணுவ வீரர்களுடன் தீபாவளியைக் கொண்டாடி, அவர்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ந்தார்.
தேசத்தைப் பாதுகாப்பவர்களுடன் தீபாவளியைக் கொண்டாடுவது மேலும் இனிமையாக உள்ளது என்பதைத் தெரிவிக்கும் வகையில், பிரதமர் கொண்டாட்டங்களின் காணொலியைப் பகிர்ந்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"நம்மைப் பாதுகாப்பவர்களுடன் தீபாவளி கொண்டாடுவது மேலும் அதிக இனிமையாக உள்ளது! #பஸ்தர் #நக்சல் இல்லாத இந்தியா"
****
(Release ID: 2334101)
AD/PLM/RJ