பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

நாக்பூரில் விவசாயிகளுடன் தீபாவளியைக் கொண்டாடிய மகாராஷ்டிர முதலமைச்சர் திரு தேவேந்திர ஃபட்னாவிஸின் செயலுக்குப் பிரதமர் பாராட்டு

இடுகை இடப்பட்ட நாள்: 08 NOV 2026 10:20AM by PIB Chennai

மகாராஷ்டிர முதலமைச்சர் திரு தேவேந்திர ஃபட்னாவிஸ், நாக்பூர் மாவட்டம், நர்கேட் தாலுகாவில் உள்ள லோஹாரி சவாங்கா கிராமத்தில் விவசாயிகளுடன் தீபாவளியைக் கொண்டாடியதையும், அருணாபாய் மற்றும் ராம்பாவ் பால்பாண்டே ஆகியோரின் இல்லத்தில் தங்கியதையும் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

மகாராஷ்டிராவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, விவசாயிகளுக்காகவும் அவர்களின் நலனை உறுதி செய்வதற்காகவும் எந்த அளவுக்குக் கருணையுடனும் அக்கறையுடனும் செயல்பட்டு வருகிறது என்பதை, இந்த நெகிழ்ச்சியான செயல் உணர்த்துகிறது என்று பிரதமர் கூறினார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் திரு மோடி பதிவிட்டிருப்பதாவது:

மகாராஷ்டிர முதலமைச்சர் திரு தேவேந்திர ஃபட்னாவிஸ் அவர்கள், நாக்பூர் மாவட்டம் நர்கேட் பகுதியில் உள்ள லோஹாரி சவாங்கா கிராமத்தில் விவசாயிகளுடன் தீபாவளியைக் கொண்டாடியதும், அருணாபாய் மற்றும் ராம்பாவ் பால்பாண்டே ஆகியோரின் இல்லத்தில் தங்கியதும் மிகவும் நெகிழ்ச்சியூட்டும் செயலாக உள்ளது. மகாராஷ்டிராவின் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, விவசாயிகளின் நலனுக்காகவும் அவர்களின் நல்வாழ்வை உறுதி செய்வதற்காகவும் எவ்வளவு கருணையுடனும் அக்கறையுடனும் செயல்படுகிறது என்பதை இந்த நிகழ்வு உணர்த்துகிறது.”

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2334072&reg=3&lang=1  

****

AD/RB/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2334106) வருகையாளர் எண்ணிக்கை : 13
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi , Manipuri , Bengali , Gujarati , Kannada , Malayalam