சுரங்கங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கனிம ஆய்வுகளை வலுப்படுத்த மத்திய- மாநில அரசுகள் இணைந்து செயல்படுவது அவசியம்: மத்திய அமைச்சர் திரு கிஷன் ரெட்டி

இடுகை இடப்பட்ட நாள்: 06 NOV 2026 4:22PM by PIB Chennai

கோவாவில் நடைபெற்ற சுரங்கத்துறை அமைச்சர்களின் 4வது மாநாடு நிறைவுபெற்றது. இம்மாநாட்டின் 2வது நாளில் சுரங்கத்துறையின் வளர்ச்சி குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில், தெலங்கானா, மேற்கு வங்கம், கர்நாடகா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். சுரங்கத்துறையில்  உள்ள பிரச்சினைகள், எதிர்கொள்ளும் சவால்கள், வேலைவாய்ப்புகள் குறித்து தங்களது கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.

இம்மாநாட்டில் பேசிய மத்திய நிலக்கரி, கனிம வளத்துறை அமைச்சர் திரு கிஷன் ரெட்டி, கனிமங்களின் தேவை அதிகரித்து வரும் நிலையில், கனிம ஆய்வை மேம்படுத்த மத்திய- மாநில அரசுகள் இணைந்து செயல்படுவது அவசியம் என வலியுறுத்தினார்.  கனிமங்கள் மூலம் வருவாயைப் பெருக்க மாநில அரசுகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டார். மாநாட்டில் பேசிய நிலக்கரி, கனிமவளத்துறை இணையமைச்சர் திரு சதீஷ் சந்திரா துபே, சுரங்க திட்டங்களை வலுப்படுத்தவும், கனிமத் தன்னிறைவு பெறுவதற்கும் மாநில அரசுகளின் பங்கு முக்கியம் எனவும் கூறினார்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2333606&reg=3&lang=1

***

TV/LN/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2334008) வருகையாளர் எண்ணிக்கை : 26
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Telugu , Kannada