சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

தலைமைப் பண்பில் நற்பண்புகள், தனிநபர் திறன் ஆகியவற்றை மேம்படுத்த சட்டத் துறையினருக்கு பயிற்சி

இடுகை இடப்பட்ட நாள்: 07 NOV 2026 11:45AM by PIB Chennai

மத்திய சட்டம், நீதித்துறை அமைச்சகத்தின் சட்டமியற்றல் துறை, அதிகாரிகளின் தலைமைப் பண்பையும் நிர்வாகத் திறனையும் மேம்படுத்தும் நோக்கில் கலந்துரையாடல் தொடர் நிகழ்ச்சியைத் தொடங்கியுள்ளது.

இதன் முதல் அமர்வு நேற்று முன்தினம் (நவம்பர் 5, 2026) புதுதில்லி கர்தவ்ய பவன்-2-ல் நடைபெற்றது. சட்டத் துறை கூடுதல் செயலர் டாக்டர் மனோஜ் குமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கூடுதல் செயலர் அகாலி வி. காங்காய் தலைமைப் பண்பில் நற்பண்புகள் மற்றும் தனிநபர் திறனை மேம்படுத்துவது குறித்து உரையாற்றினார்.

தலைமைப் பண்பு என்பது, பதவியாலும் அதிகாரத்தாலும் மட்டுமல்லாமல, நேர்மை, பணிவு, பொறுப்புணர்வு, ஒத்துழைப்பு, சிறந்த தகவல் தொடர்பு, பிறரை ஊக்குவிக்கும் செயல்பாடுகள் ஆகிநவற்றால் உண்மையான தலைமை பண்பு உருவாகிறது என்று அவர் கூறினார். தலைமைப் பண்புக்கான 5 முக்கிய அம்சங்களாக நிலைத்தன்மை, பண்பாடு, பங்களிப்பு, சமூகப் பொறுப்பு, ஆர்வத்துடன் கற்றல் ஆகியவற்றை அவர் விளக்கினார்.

 இந்நிகழ்வில் 80-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். அனுபவப் பகிர்வையும் சிறந்த நிர்வாக நடைமுறைகளையும் ஊக்குவிக்க இக்கலந்துரையாடல் தொடர் தொடர்ந்து நடத்தப்பட உள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2333905&reg=3&lang=1

****

SK/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2333929) வருகையாளர் எண்ணிக்கை : 4
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Gujarati