ரெயில்வே அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டு விழாவை முன்னிட்டு ஓராண்டு கால கொண்டாட்டங்களை நிறைவு செய்தது ரயில்வே அமைச்சகம்

இடுகை இடப்பட்ட நாள்: 05 NOV 2026 7:59PM by PIB Chennai

வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு விழாவை நினைவுகூரும் ஓராண்டு கால கொண்டாட்டங்களின் நான்காம் கட்டத்தை (இறுதி வாரம், 1-7 நவம்பர் 2026) முன்னிட்டு, ரயில்வே அமைச்சகம் இன்று (05.11.2026) ரயில் பவனில் ஒரு கலாச்சார நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தது. இந்நிகழ்ச்சியில், ரயில்வே வாரியத்தின் தலைவர் திரு. சதீஷ் குமார், வாரிய உறுப்பினர்கள், தலைமை இயக்குநர்கள் பிற மூத்த ரயில்வே அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தேசிய ஒற்றுமை, நாட்டுப்பற்றுடன் தொடர்புடைய இந்தியாவின் வளமான கலாச்சார பாரம்பரியத்தை முன்னிலைப்படுத்தும் தொடர் நிகழ்வுகளின் மூலம், ஆண்டு முழுவதும் நடைபெற்ற கொண்டாட்டங்கள் நான்கு கட்டங்களாக ஏற்பாடு செய்யப்பட்டன.

முதல் கட்டம் - வந்தே மாதரம் கூட்டுப் பாடல்:

முதல் கட்டப் பணிகள், 2025 நவம்பர் 7 அன்று ரயில் பவனில் உள்ள மாநாட்டு அரங்கில் வந்தே மாதரம் மக்கள் கூட்டுப் பாடலுடன் தொடங்கின. இந்நிகழ்ச்சியில் மத்திய ரயில்வே துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் கலந்துகொண்டார்.

இரண்டாம் கட்டம் - கட்டுரைப் போட்டி:

வந்தே மாதரம்: இந்தியாவின் பன்முகத்தன்மையில் ஒற்றுமையின் உணர்வு என்ற கருப்பொருளில் , 2026 ஜனவரி 22 அன்று ரயில்வே வாரியத்தில் ஒரு கட்டுரைப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டது.

மூன்றாம் கட்டம் - வினாடி வினாப் போட்டி, மூவர்ணக் கொடிப் பேரணி:

வந்தே மாதரத்தின் 150 ஆண்டு காலப் பயணத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு வினாடி வினாப் போட்டி, 2026 ஆகஸ்ட் 10 அன்று ரயில்வே வாரியத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. மத்திய ரயில்வே துறை அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவ் தலைமையில், ரயில் பவன் வளாகத்திற்குள் ஒரு மூவர்ணக் கொடிப் பேரணியும் நடத்தப்பட்டது.

நான்காம் கட்டம் - வெற்றியாளர்களைப் பாராட்டுதல், நிறைவு நிகழ்ச்சி:

இன்று (2026 நவம்பர் 5) நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, இரண்டாம் கட்டத்தில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியிலும், மூன்றாம் கட்டத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட வினாடி வினாப் போட்டியிலும் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகளும் தகுதிச் சான்றிதழ்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

ஆண்டு முழுவதும் நடைபெற்ற கொண்டாட்டங்களில் பல்வேறு நிகழ்ச்சிகளை வெற்றிகரமாக ஏற்பாடு செய்ததில் ஆற்றிய பங்களிப்பிற்காக ரயில்வே வாரிய கலாச்சாரக் குழுவும் கௌரவிக்கப்பட்டது. அதன் முயற்சிகளை அங்கீகரிக்கும் வகையில், அக்குழுவிற்கு ஒரு பரிசுடன் தகுதிச் சான்றிதழும் வழங்கப்பட்டது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2333284&reg=3&lang=1

***

SK/PLM/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2333858) வருகையாளர் எண்ணிக்கை : 35
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese , Punjabi , Gujarati