மத்திய பணியாளர் தேர்வாணையம்
azadi ka amrit mahotsav

தேசிய பாதுகாப்பு அகாடமி, கடற்படை அகாடமி தேர்வு 2026-ன் இறுதி முடிவுகள் அறிவிப்பு

இடுகை இடப்பட்ட நாள்: 05 NOV 2026 7:52PM by PIB Chennai

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) 2026  ஏப்ரல் 12 அன்று நடத்திய எழுத்துத் தேர்வு மற்றும் அதனைத் தொடர்ந்து பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சேவைகள் தேர்வு வாரியம் நடத்திய நேர்காணல்களின் அடிப்படையில், தேசிய பாதுகாப்பு அகாடமியின் 157-வது படிப்புப் பிரிவு, இந்திய கடற்படை அகாடமியின் 119-வது படிப்புப் பிரிவுக்குத் தகுதி பெற்ற 617 விண்ணப்பதாரர்களின் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மேற்கூறிய படிப்புப் பிரிவுகள் தொடங்கும் தேதி குறித்த கூடுதல் விவரங்களுக்கு, பாதுகாப்பு அமைச்சகத்தின் இணையதளங்களான www.joinindianarmy.nic.in, www.joinindiannavy.gov.in www.careerindianairforce.cdac.in   ஆகியவற்றை அணுகலாம்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2333280&reg=3&lang=1  

****

SK/BR/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2333857) வருகையாளர் எண்ணிக்கை : 4
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Punjabi