இடுகை இடப்பட்ட நாள்:
06 NOV 2026 5:20PM by PIB Chennai
மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகத்தின் நிலவளங்கள் துறை சார்பில், சிறப்பு தூய்மை இயக்கம் 6.0 மூலம், 2026 அக்டோபர் 2 முதல் 31-ம் தேதி வரை, தூய்மைப் பணிகள், பொதுமக்கள் குறைதீர்ப்பு, அலுவலக மேலாண்மை ஆகிய பணிகள் முன்னெடுக்கப்பட்டன. குறிப்பாக, தூய்மைப் பணியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு 100 சதவீதம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக நிலவளங்கள் துறை தெரிவித்துள்ளது. இதேபோல் பொதுமக்களின் புகார்களுக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பரிந்துரைந்த மனுக்களுக்கும் உரிய தீர்வு காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அலுவலக மேலாண்மையின் கீழ், மொத்தம் 1449 கோப்புகளும், 591 மின்னணு கோப்புகளும் ஆய்வு செய்யப்பட்டன. மன நலத்தை பேணும் வகையில் யோகா பயிற்சி, சுகாதார விழிப்புணர்வு ஓவியப் போட்டிகள் நடத்தப்படதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2333669®=3&lang=1
****
TV/LN/RJ