இடுகை இடப்பட்ட நாள்:
05 NOV 2026 7:20PM by PIB Chennai
இந்தியக் கடற்படையின் வருடாந்திர உயர்மட்ட சர்வதேச உத்திசார் உரையாடலான, இந்தோ-பசிபிக் பிராந்திய மாநாடு 2026 (IPRD-2026), இன்று (2026 நவம்பர் 05) புதுதில்லியில் நிறைவடைந்தது. மூன்று நாள் நடைபெற்ற இந்த மாநாட்டில் பிராந்திய கடல்சார் ஒத்துழைப்பிற்கான நடைமுறைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதில் ஐந்து கருப்பொருள் அமர்வுகள், உயர் மட்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்றன.
முப்படைகளின் தளபதி ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்ரமணியின் சிறப்புரையுடன் நிறைவு நாள் நிகழ்வு இன்று (05.11.2026) தொடங்கியது.
இறுதி அமர்வாக மாற்றத்தை உருவாக்கும் கடல்சார் தொழில்நுட்பங்கள் என்ற கருப்பொருளை மையமாகக் கொண்ட அமர்வு நடைபெற்றது. இந்த அமர்வை இந்தியக் கடற்படையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ரியர் அட்மிரல் குனிந்தர் சிங் ஜவாண்டா நெறிப்படுத்தி நடத்தினார். பாதுகாப்புத் துறைச் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங்கின் நிறைவுரையுடன் இந்த மூன்று நாள் மாநாடு நிறைவடைந்தது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2333261®=3&lang=1
***
SK/PLM/RJ