சுரங்கங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

முக்கிய கனிமச் சுரங்கங்களுக்கான 9-வது கட்ட மின்னணு ஏலம் தொடங்கியது

இடுகை இடப்பட்ட நாள்: 05 NOV 2026 4:45PM by PIB Chennai

முக்கிய கனிமச் சுரங்கங்களுக்கான 9-வது கட்ட மின்னணு ஏலத்தையும், ஆய்வு உரிமம் வழங்குவதற்கான 3-வது கட்ட ஏலத்தையும் மத்திய நிலக்கரி, சுரங்கத்துறை அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி இன்று (2026 நவம்பர் 5) தொடங்கி வைத்தார். கோவா முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சாவந்த், மத்திய நிலக்கரி, சுரங்கத்துறை இணையமைச்சர் திரு சதீஷ் சந்திர துபே ஆகியோர் முன்னிலையில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்த 9-வது கட்டத்தில் ஆந்திரப் பிரதேசம், பீகார், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், தெலங்கானா, மேற்கு வங்கம் ஆகிய 8 மாநிலங்களில் உள்ள கிராஃபைட், டைட்டானியம் உள்ளிட்ட 20 கனிமச் சுரங்கங்கள் ஏலத்திற்கு விடப்படுகின்றன. தூய எரிசக்தி, மின்சார வாகனங்கள், பாதுகாப்பு, விண்வெளி போன்ற உயர் தொழில்நுட்பத் துறைகளின் மூலப்பொருள் தேவைகளை நிறைவு செய்வதில் இக்கனிமங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

ஆய்வு உரிமத்திற்கான 3-வது கட்ட ஏலத்தின் கீழ், 6 மாநிலங்களில் 11 சுரங்கங்கள் ஏலத்திற்கு விடப்பட்டுள்ளன. தொழில் தொடங்குவதை எளிதாக்கும் வகையில், ஏல விதிகளில் திருத்தங்கள் செய்யப்பட்டு தகுதிபெறும் ஏலதாரர்களின் குறைந்தபட்ச எண்ணிக்கை மூன்றிலிருந்து இரண்டாகக் குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஏல நடைமுறைகள் வாயிலாக உள்நாட்டில் கனிம வள உற்பத்தியை அதிகரிக்கவும், தற்சார்பு இந்தியா தொலைநோக்குப் பார்வையை வலுப்படுத்தவும் மத்திய அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2333123&reg=3&lang=1    

****

SK/PD/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2333789) வருகையாளர் எண்ணிக்கை : 8
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Telugu