சுரங்கங்கள் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சுரங்க அமைச்சர்களின் 4-வது மாநாட்டின் முதல் நாள்: முக்கிய முன்முயற்சிகள், மத்திய-மாநில ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதற்கான ஆலோசனைகள் இடம்பெற்றன

இடுகை இடப்பட்ட நாள்: 05 NOV 2026 9:29PM by PIB Chennai

மத்திய சுரங்க அமைச்சகம் சார்பாக நான்காவது சுரங்க அமைச்சர்கள் மாநாடு கோவாவில் நடைபெறுகிறது. இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டின் முதல் நாளில்,  மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சர் திரு ஜி. கிஷன் ரெட்டி, நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை இணையமைச்சர் திரு சதீஷ் சந்திர துபே, கோவா முதலமைச்சர் டாக்டர் பிரமோத் சாவந்த், சுரங்க அமைச்சகச் செயலாளர் திரு கேசவ் சந்திரா, நிலக்கரி அமைச்சகச் செயலாளர், பல்வேறு மாநிலங்களின் சுரங்க அமைச்சர்கள், சுரங்க மற்றும் நிலக்கரி அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய திரு ஜி. கிஷன் ரெட்டி, 2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியாவி அடையும் தொலைநோக்குப் பார்வையில் சுரங்கம் மற்றும் நிலக்கரித் துறைகளின் உத்திசார் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். உள்நாட்டு கனிம உற்பத்தியை வலுப்படுத்துதல், கனிம ஆய்வுகளைத் துரிதப்படுத்துதல், முக்கிய கனிமங்களைப் பதப்படுத்துதல், சுத்திகரித்தல் மற்றும் மறுசுழற்சி செய்வதை ஊக்குவித்தல், நவீன தொழில்நுட்பங்களைப் பின்பற்றுதல், மத்திய-மாநில ஒத்துழைப்பை மேம்படுத்துதல் ஆகியவை குறித்து அவர் பேசினார். சுரங்கத் துறையில் உள்ள சவால்களை எதிர்கொள்வது குறித்து திரு சதீஷ் சந்திர துபே எடுத்துரைத்தார்.

மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக்குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணவும்:https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2333352&reg=3&lang=1

***

SK/BR/RJ


(வெளியீட்டு அடையாள எண்: 2333762) வருகையாளர் எண்ணிக்கை : 10
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Marathi