இடுகை இடப்பட்ட நாள்:
06 NOV 2026 12:43PM by PIB Chennai
நிர்வாகத் திறனை உயர்த்துதல், தூய்மைப் பணிகள், பொறுப்பான மின்னணுக் கழிவுகள் மேலாண்மை ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு மத்தியக் கல்வி அமைச்சகத்தின் பள்ளிக் கல்வித் துறையால் தூய்மைக்கான சிறப்பு இயக்கம் 6.0 அக்டோபர் 2 முதல் 31 வரை நாடு தழுவிய அளவில் கடைப்பிடிக்கப்பட்டது. சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நிலையான நடைமுறைகளை ஊக்குவிக்கவும் பள்ளிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் இந்த இயக்கத்தில் ஒருங்கிணைந்து செயல்பட்டனர்.
இந்த காலகட்டத்தில் 41,181 கோப்புகள் மறுஆய்வு செய்யப்பட்டு, 31,010 பயன்பாடற்ற கோப்புகள் அகற்றப்பட்டன. கழிவுப் பொருட்களை அகற்றியதன் மூலம் ரூ.67.27 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டது. நாடு முழுவதும் உள்ள 2.85 லட்சம் பள்ளிகளைச் சேர்ந்த 2.02 கோடி மாணவர்கள், ஆசிரியர்கள் இணைந்து 58.79 லட்சம் மின்னணுக் கழிவுப் பொருட்களைச் சேகரித்து சாதனை படைத்துள்ளனர். பள்ளிகள், அலுவலகங்களில் 7 லட்சத்திற்கும் மேற்பட்ட தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2333480®=3&lang=1
***
SS/PD/SU