சுற்றுலா அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சிறப்புத் தூய்மை இயக்கம் 6.0-ஐ வெற்றிகரமாக நிறைவு செய்தது சுற்றுலா அமைச்சகம்

இடுகை இடப்பட்ட நாள்: 06 NOV 2026 1:12PM by PIB Chennai

தூய்மையை ஊக்குவித்தல், நிர்வாகத் திறனை மேம்படுத்துதல், நிலுவையில் உள்ள குறைளை விரைந்து தீர்ப்பதை உறுதி செய்தல் ஆகியவற்றின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்ட, தூய்மைக்கான சிறப்பு இயக்கம் 6.0-ஐ சுற்றுலா அமைச்சகம் வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. இந்த இயக்கத்தில், அமைச்சகத்தின் கீழ் உள்ள அலுவலகங்களும், தொடர்புடைய பிற நிறுவனங்களும் தீவிரமாகப் பங்கேற்றன.

சிறப்பு இயக்கம் 6.0-இன் கீழ், அமைச்சகம் தனது இலக்குகளை கடந்து குறிப்பிடத்தக்க சாதனைகளைப் பதிவு செய்துள்ளது. இந்த இயக்கத்தின் விளைவாக, 63,461 சதுர அடி அலுவலக இடம் விடுவிக்கப்பட்டதுடன், தேவையற்ற பழைய பொருட்களை அகற்றியதன் மூலம் ரூ. 68,05,834 வருவாய் ஈட்டப்பட்டது.

இந்த இயக்கத்தின் ஒரு முக்கிய அங்கமாகத் தூய்மைப் பணிகள் அமைந்தன. நாடு முழுவதும் 302 இடங்களில் தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.

நாடு முழுவதும் தூய்மையை மேம்படுத்துதல், நிர்வாகத் திறனை அதிகரித்தல், சுற்றுலா இடங்களைத் தூய்மையாகப் பராமரித்தல் ஆகியவற்றில் சுற்றுலா அமைச்சகம் மேற்கொண்டு வரும் தொடர்ச்சியான முயற்சிகளை இது பிரதிபலிக்கிறது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2333491&reg=3&lang=1

***

TV/PLM/SU


(வெளியீட்டு அடையாள எண்: 2333621) வருகையாளர் எண்ணிக்கை : 7
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , हिन्दी , Assamese