இடுகை இடப்பட்ட நாள்:
06 NOV 2026 2:48PM by PIB Chennai
மத்திய அறிவியல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அறிவியல் தொழிலக ஆராய்ச்சித் துறையின் சார்பில், நாடு முழுவதும் செயல்படுத்தப்பட்ட சிறப்புத் தூய்மை இயக்கம் 6-ல் நிர்ணயிக்கப்பட்ட அனைத்து முக்கிய இலக்குகளும் எட்டப்பட்டுள்ளன. இந்த இயக்கத்தை 2026 அக்டோபர் 2 அன்று மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தொடங்கி வைத்தார்.
பொதுமக்களின் குறைகள், பிற கோரிக்கைகள் ஆகியவற்றுக்குத் தீர்வு காண்பதிலும், பழைய ஆவணங்களைப் பராமரிப்பதிலும் 100% இலக்குகள் எட்டப்பட்டன.
9,805 பழைய காகிதக் கோப்புகளை ஆய்வு செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், 13,956 கோப்புகள் ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு பணிகள் நிறைவு செய்யப்பட்டன.
தேவையற்ற பழைய பொருட்களை அகற்றியதன் மூலம் ரூ.76.36 லட்சம் வருவாய் ஈட்டப்பட்டது. மேலும், 21,117 சதுர அடி அலுவலக இடம் மீட்கப்பட்டு பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டது. நாடு முழுவதும் 150 இடங்களில் தூய்மைப் பணிகள் முழுமையாக நிறைவேற்றப்பட்டன.
நகர்ப்புறத் தூய்மைக்கான தொழில்நுட்பம், உயிரி தார்ச்சாலைப் பொருள், பவளப்பாறைகளைக் கண்காணிக்கும் ரோபோ ஆகிய புதிய முயற்சிகளும் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்தச் சாதனை, திறமையான, வெளிப்படையான மக்கள் நல நிர்வாகத்தைச் செயல்படுத்துவதில் இத்துறையின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்:https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2333549®=3&lang=1
***
TV/PLM/SU