இடுகை இடப்பட்ட நாள்:
06 NOV 2026 1:50PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, தந்தேராஸ் பண்டிகையை முன்னிட்டு மத்திய இணையமைச்சர் திரு பிரதாப்ராவ் ஜாதவ் எழுதிய கட்டுரை ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
ஆயுர்வேதம் எவ்வாறு ஆரோக்கியத்தைப் பேணுவதற்கும், நோய்த்தடுப்பு சுகாதாரத்திற்கும் முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை இக்கட்டுரை எடுத்துக்காட்டுகிறது என கூறியுள்ளார். இது, கவனத்துடன் உணவு உட்கொள்ளுதல், யோகா, போதுமான உறக்கம், சரியான நேரத்தில் உடல்நலப் பரிசோதனைகள் உள்ளிட்ட ஆரோக்கியமான பழக்கவழக்கங்களைக் கடைப்பிடிக்குமாறு குடும்பங்களை ஊக்குவிக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.
அன்புக்குரியவர்களின் ஆரோக்கியத்தில் முதலீடு செய்வதன் முக்கியத்துவத்தையும், குடும்பங்களுக்கு ஆரோக்கியமான எதிர்காலத்தை உருவாக்குவதன் அவசியத்தையும் இக்கட்டுரை வலியுறுத்துகிறது என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் திரு நரேந்திர மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
"இந்த தந்தேராஸ் பண்டிகையில் சிறந்த ஆரோக்கியத்திற்கு உறுதி கொள்ளுங்கள்!
மத்திய இணையமைச்சர் திரு பிரதாப் ராவ் ஜாதவ், ஆயுர்வேதம் எவ்வாறு ஆரோக்கியத்தைப் பேணுவதை வலியுறுத்துகிறது என்பதையும், நோய் தடுப்பு சுகாதாரப் பராமரிப்பு ஏன் முக்கியமானது என்பதையும் எடுத்துரைத்துள்ளார். கவனமான உணவுப் பழக்கம், வழக்கமான யோகா, போதுமான உறக்கம், சரியான நேரத்தில் சுகாதாரப் பரிசோதனைகள் போன்ற ஆரோக்கியமான பழக்கவழக்கங்களைக் குடும்பங்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் ஊக்குவிக்கிறார்.
மிகவும் முக்கியமான ஆரோக்கியத்தில் முதலீடு செய்வோம். நம் அன்புக்குரியவர்களின் ஆரோக்கியத்திலும், நம் குடும்பங்களின் ஆரோக்கியமான எதிர்காலத்திலும் கவனம் செலுத்துவோம்."
-----
(Release ID: 2333526)
TV/PLM/SU