இடுகை இடப்பட்ட நாள்:
06 NOV 2026 10:12AM by PIB Chennai
ஜார்க்கண்ட் மாநிலம் குந்தியில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டது குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த வேதனை தெரிவித்துள்ளார்.
உறவினர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்குப் பிரதமர் தமது இரங்கலைத் தெரிவித்துள்ளதோடு, காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெறப் பிரார்த்திப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து பிரதமர் அலுவலகம் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஜார்க்கண்ட் மாநிலம் குந்தியில் நிகழ்ந்த விபத்தில் உயிரிழப்புகள் ஏற்பட்டது குறித்து பிரதமர் மிகவும் வேதனை அடைந்ததாகவும், உறவினர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு அவர் இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், காயமடைந்தவர்கள் விரைவில் நலம் பெறப் பிரதமர் பிரார்த்திப்பதாகவும் அந்தப் பதிவில் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
***
(Release ID: 2333414)
SS/PD/SU