புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம்
இடுகை இடப்பட்ட நாள்:
05 NOV 2026 5:19PM by PIB Chennai
புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் இந்தியா ஒரு உலகளாவிய சக்தியாக உருவெடுத்துள்ளதாக மத்திய புதிய, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறை அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். புதுதில்லி பாரத் மண்டபத்தில் 2026 நவம்பர் 2 முதல் 5 வரை நடைபெற்ற இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உச்சி மாநாடு & கண்காட்சி 2026 நிறைவு நிகழ்வில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இம்மாநாடு இந்தியாவின் தூய்மை எரிசக்திப் பொருளாதார வலிமையையும், முதலீட்டு வாய்ப்புகளையும் உலகிற்கு வெளிப்படுத்தியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
பிரதமர் திரு நரேந்திர மோடியால் 2026 நவம்பர் 2 அன்று தொடங்கி வைக்கப்பட்ட இந்த 4 நாள் உச்சி மாநாட்டில், 135-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள், 32 சர்வதேச அமைச்சர்கள், தொழில்துறைத் தலைவர்கள், முதலீட்டாளர்கள், 300-க்கும் மேற்பட்ட புத்தொழில் நிறுவனங்கள் பங்கேற்றன. கடந்த நிதியாண்டில் இந்தியாவின் மொத்த மின் நுகர்வில் நான்கில் ஒரு பங்குக்கும் அதிகமான அளவு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள் மூலம் பெறப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டது.
நாட்டின் 500 ஜிகாவாட் புதைபடிவமற்ற எரிசக்தி உற்பத்தி இலக்கை எட்டுவதற்குத் தேவையான முதலீடுகளை ஈர்க்கவும், பசுமை ஹைட்ரஜன் உற்பத்தி, மின்கலன் சேமிப்பு, உள்நாட்டு உபகரண உற்பத்தித் திறன்களை வலுப்படுத்தவும் இம்மாநாடு முக்கிய அடித்தளமாக அமைந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2333162®=3&lang=1&_gl=1
****
SK/PD/SH