மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

இணைய தொடர்பு அல்லாத ஆதார் சரிபார்ப்பு நடைமுறைகளை விரிவுபடுத்துகிறது யுஐடிஏஐ

இடுகை இடப்பட்ட நாள்: 05 NOV 2026 5:29PM by PIB Chennai

மக்களிடையே ஆதார் செயலியின் பயன்பாடு அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, இணைய தொடர்பு அல்லாத வகையில் சரிபார்க்கும் 300 நிறுவனங்களை (ஓவிஎஸ்இ - OVSE) தனித்துவ அடையாள ஆணையமான யுஐடிஏஐ தனது கட்டமைப்பில் இணைத்துள்ளது.

ஹோட்டல்கள், விருந்தோம்பல் நிறுவனங்கள், சுகாதார நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், உட்பட நுகர்வோரையும் மக்களையும் நேரடியாகச் சந்திக்கும் நிறுவனங்கள், ஆதார் அடிப்படையிலான நேரடிச் சரிபார்ப்பின் பயன்பாட்டை விரிவுபடுத்துவதற்கான ஒரு முக்கியப் நடவடிக்கையாக இது அமைகிறது.

இந்த மைல்கல் நடவடிக்கை, இணைய தொடர்பு அல்லாத நேரடி முறையிலான (ஆஃப்லைன்) ஆதார் சரிபார்ப்பு வழிமுறையின் மூலம் பாதுகாப்பான, ஒப்புதல் அடிப்படையிலான, காகிதமில்லா சரிபார்ப்பைச் செயல்படுத்துவதில் ஒரு பெரிய முன்னேற்றமாகும். இது சேவை வழங்குநர்கள், பயன்படுத்துவோர் ஆகிய இரு தரப்பினருக்கும் அதிக வசதியை அளிக்கிறது.

இந்த முன்முயற்சிகள், அரசின் டிஜிட்டல் இந்தியா தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப மக்களின் வாழ்க்கையை எளிதாக்குதல் என்ற பரந்த நோக்கத்தைப் பிரதிபலிக்கின்றன.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலச் செய்திக் குறிப்பைக் காணவும் : https://www.pib.gov.in/PressReleaseDetail.aspx?PRID=2333177&reg=3&lang=1&_gl=1

(Release ID : 2333177)

****

SK/PLM/SH


(வெளியீட்டு அடையாள எண்: 2333268) வருகையாளர் எண்ணிக்கை : 16
இந்த வெளியீட்டை படிக்க: English , Gujarati , Urdu , हिन्दी , Kannada